Discipline ஒரு இயற்கை விவசாயம் செய்து வரும் பண்ணை. இதற்கு Discipline என பெயர் வரக்காரணம் முன்பெல்லாம்
இங்கு அதிக அளவில் துளசி செடிகள் இருந்திருக்கின்றன, ஸ்ரீ அன்னை அவர்கள் அனைத்து மலர்களுக்கும் பெயர்
சூட்டுகையில், துளசி மலருக்கு Discipline
என பெயரிட்டிருக்கிறார், ஆகவே இவ்விடம் Discipline (துளசி மலர்) என்ற பெயரால்
அழைக்கப்பட்டு வருகிறது. இதன் தற்போதைய நிறுவனர் Mr. Jeff அவர்கள், இந்த பண்ணை 1976 முதல் இயங்கி வருகிறது. இதன் பரப்பளவு 14 ஏக்கர். இங்கு பதினைந்திற்கும் மேற்ப்பட்டோர்
பணிபுரிகின்றனர்.
முதல் நாள் : (24.10.2016)
Discipline
பண்ணை பற்றிய அறிமுகங்களை திரு. முருகன் மற்றும்
திரு. பிராங்க் அவர்கள் விளக்கமாக சொன்னார்கள். அதே சமயம் அவர்கள் இருவரின் வேகமும்,
வேலை செய்கின்ற நுணுக்கங்களை பார்க்கும் போது உண்மையில் வியப்பாக இருந்தது.
பின்பு பண்ணையில்
செய்துவரும் விவசாய வேலைகள், பயிரிடும் முறைகள், விதை சேகரிப்பு முறைகள், பசு பராமரிப்பு
மற்றும் உரம் தயாரித்தல் நடைமுறைகளை திரு.பிராங்க் அவர்கள் வாயிலாக கேட்டறிந்து கொண்டேன்.
மேலும், அன்றைய நாள் முழுவதும் மண்புழு உரம் (Vermi compost) தயாரித்தல் பணியில் ஈடுபட்டேன், உரங்களை வகைபிரித்து தனிதனி
பீப்பாய்களில் சேகரிக்கத் தொடங்கினேன்.
நேரடி பயிற்சியின் மூலம் மண்புழு உரம் தயாரித்தல் முறைகளை
தெரிந்துகொண்டேன்.
இரண்டாம் நாள் : (25.10.2016)
இயற்கை உரம் தயாரிப்பதற்கு தேவையான
சாணம்,புள்,சாம்பல்&கரி போன்றவைகளை கொண்டு உரம் உருவாக்க பயன்படும் அடுக்குகளை
உருவாக்கினோம்.
புற்களை அறுத்து கொண்டு வந்து, பசு பராமரிப்பு
பணி செய்துகொண்டிருந்தேன். அவ்வேலைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, காரணம் சிறு
வயதிலிருந்தே பசுங்கன்றுகளோடு அதிகம் பிரியம் கொண்டவன் நான்.. அன்றைய நாள்
முழுவதும் திரு. ஸ்ரீவன் அவர்கள் என்னோடு இணைந்தார். அவர் ஒரு இயற்கை உர ஆர்வலர்
அவர் இங்கு உள்ள உரதயாரிப்பு முறைகளை தெரிந்துகொள்ள வந்துள்ள தன்னார்வலர். அவரின்
செய்முறை மூலமாக நான் தெரிந்துகொண்ட விஷயம் பொறுமையாக செய்தாலும் சரியாக
செய்யவேண்டும் என்பதே..
மேலும் மஞ்சம் புள் நிறைந்த பகுதிகளில் வேலி
அமைத்தோம். வேலி அமைக்க திரு.ராஜி அவர்களோடு இணைந்தேன். அடுக்குகள் நிறைந்த உரம் தயாரிப்பு முறைகளையும், பசு பராமரிப்பு
முறைகளையும் அறிந்து கொண்டதில் அன்றைய நாள் எனக்கு பெருமகிழ்ச்சியாக இருந்தது.
மூன்றாம் நாள் : (27.10.2016)
காலை முதலே மூங்கில் வெட்டும் பணியில் ஈடுபட்டோம், என்னோடு
ஜெர்மனியில் இருந்து வந்துள்ள தன்னார்வல மாணவர்கள் ஜனாவாஸ் மட்டும் அனாஸ் என்னோடு
இணைந்தார்கள்.. கூடவே திரு. முருகன் அவர்களும் என்னோடு மூங்கில் வெறும் பணியில்
தீவிரமாக இறங்கினார், ஜெர்மன் நண்பர்களின் துடிப்பு, வேகம் அதிலும் குறிப்பாக
அனாஸ் செய்யும் வேலைகள் என்னை ஒரு நிமிடம் வியப்படைய வைத்துவிட்டது. நான் மூங்கில் மீது ஏணி போட்டு ஏறி மூங்கிலை வெட்டும்
போது அவர்கள் இருவரும் கீழிருந்து மூங்கிலை மிகவும் லாவகமாக சிரித்துகொண்டே
இழுத்தார்கள்.
பின்பு இன்றைய நாள் முழுக்க மூங்கிலை வெட்டி
கொண்டுபோய், பப்பாளி மரங்களுக்கு தூண் முட்டு அமைக்க மூங்கிலை சேகரித்தோம்.
இன்றுவரை அங்கு வேலை
செய்யம் பணியாட்கள் முதல் தேநீர் இடைவேளை வரை அனைவரின் அனுசரிப்பும்,
ஒத்துழைப்பும், கற்றுத்தரும் விதமும் எனக்கு முழு அளவில் கிடைத்து வருவதையும்
இன்னும் எவ்வளவோ இங்கு கற்றுகொள்ளலாம் என்று நினைக்கையில் Discipline எனும் வாசம் என்றும் மாறாது.
by.sathyaraj, SLI
No comments:
Post a Comment