10/31/2016

பருவக்காற்றும் பப்பாளியின் பாதுகாப்பும் !


  வழக்கம்போல நான்காவது நாளாக Discipline பண்ணைக்கு அதிகாலையிலே சென்றேன், திரு.முருகன் அவர்கள் என்னையும் என்னை போல தன்னார்வல பணி செய்ய வந்துள்ள நண்பர்கள் ஜானாவாஸ், அனாஸ் மற்றும் மதன் ஆகியோரை அழைத்து சென்று ஏற்கனவே வெட்டி சேகரித்து வைத்த மூங்கில்களை கொண்டு பப்பாளி மரங்களுக்கு முட்டு அமைக்கும் விதத்தையும், முறையையும் விளக்கமாக சொல்லியும் செய்தும் காட்டினார்.
     அதன் பிறகு நாங்கள் பப்பாளிக்கு முட்டு கொடுக்க தொடங்கினோம்.. ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு உயரம், வெவ்வேறு கோணம் என இருந்தது, நாங்கள் எந்த கோணத்தில் எப்படி முட்டு அமைப்பது என தெரியாமல் விழி பிதுங்க உடனே அங்குவந்த திரு.முருகன் எங்களுக்கு பருவக்காற்றும் பப்பாளியின் பாதுகாப்பும் பற்றி விரிவாக உணர்த்தினார்.. வரக்கூடிய காலம் வடகிழக்கு பருவகாற்று நிறைந்த மழைக்காலம் நிச்சயம் அதிக அளவில் காற்றுடன் கூடிய மழைதான் வரும்     ஆகவே நாம் பருக்காற்று அடிக்கும் திசை தெரிந்துதான் முட்டுகளை அமைக்க வேண்டுமென சொன்னார் அதோடு, பப்பாளி மரத்தின் உயரத்திற்கு ஏற்றவாறு மூங்கில்களை வெட்டி பப்பாளியின் மெலிந்துள்ள உச்சி பலத்த காற்றைசைவில் கீழ் சாயாமல் இருக்கும் வகையில் முட்டு கொடுக்க வேண்டுமென்பதையும் கற்றுதந்ததையடுத்து நாங்களாகவே நிறைய பப்பாளிகளுக்கு முட்டு அமைத்தோம்,
இன்றைய நாளில் பெருமகிழ்ச்சி எனக்கு மரம் நடுவதைக்காட்டிலும், நட்டுவைத்த மரத்தை பாதுக்காப்பதே!! என்று நினைக்கும்போது...
                                                                                                                                                                by.sathyaraj

                                                                                                                                                               



31.10.2016

No comments:

Post a Comment