நேற்று
காலையிலே மழைத்தூரல் மிதமாக வந்துசென்றதால் அவ்வளவாக வெயில் தென்படவில்லை. ஆகவே
வழக்கத்தை விட சுறுசுறுப்பு கூடியது.
புதிதாக
ஊன்றிய மரக்கன்றுகள் உள்ள பகுதிக்கு சென்றோம்.. எங்களோடு சுற்றுவேலிகளை
பராமரிக்கும் திரு. ராஜீவ் அவர்கள் எங்களோடு இணைந்தார். அந்த பகுதி முழுக்க
மரக்கன்றுகளை சூழ்துள்ள களைகளை எடுக்கதொடங்கினோம், களைகளோடு நிறைந்த தொட்டால்
சிணுங்கி செடிகளின் முற்கள் பெரும் சவாலாக இருந்தது. கூடவே இந்த களைகளை எடுப்பது
கூட தனிக்கலை அல்லவோ என என்னுள் தோன்றியது. அந்த களைகளை அங்குள்ள
மரக்கன்றுகளுக்கு அடியுரமாக இட்டதோடு மீதம் இருந்த புற்களை பசுக்களுக்கு தீவனமாக
கொண்டுசொன்றோம்.
by.sathyaraj
01.11.2016
No comments:
Post a Comment