10/27/2016

volunteering in discipline

       பெயர்               : மதன்

       நிறுவனம்     : Discipline Farm, Auroville.         

Discipline ஒரு இயற்கை விவசாயம் செய்து வரும் பண்ணை. இதற்கு Discipline என பெயர் வரக்காரணம் இங்கு அதிக அளவில் துளசி செடிகள் இருந்தன. ஸ்ரீ அன்னை அவர்கள் அனைத்து மலர்களுக்கும் பெயர் சூட்டுகையில், துளசி மலருக்கு Discipline என பெயரிட்டார் ஆகவே இவ்விடத்திற்கு Discipline என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. இதன் தற்போதைய நிறுவனர் Mr. Jeff அவர்கள், இந்த  பண்ணையில் கடந்த 25 வருடமாக பணியாற்றுகிறார்.   இந்த பண்ணை 1976 முதல் இயங்கி வருகிறது. இதன் பரப்பளவு 14 ஏக்கர். இங்கு பதினைந்திற்கும் மேற்ப்பட்டோர் பணிபுரிகின்றனர். அங்கு வரும் தன்னாவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

முதல் நாள் : (24.10.2016)

        Discipline பண்ணை பற்றிய அறிமுகங்களை திரு. முருகன் மற்றும் திரு. பிராங்க் அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

   பின்பு பண்ணையில் செய்துவரும் விவசாய வேலைகள், பயிரிடும் முறைகள், விதை சேகரிப்பு முறைகள், மாடு பராமரிப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் நடைமுறைகளை திரு.பிராங்க் அவர்கள் வாயிலாக அறிந்து கொண்டேன் மற்றும் மண்புழு உரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன்.

மேலும், அன்றைய நாள் முழுவதும் மண்புழு உரம் (Vermi compost) தயாரித்தல் பணியில் ஈடுபட்டோம், உரங்களை பயன்பாட்டிற்கு தேவையான முறையில் வகைபிரித்து தனிதனி பீப்பாய்களில் சேகரித்தோம்.

நேரடி பயிற்சியின் மூலம் மண்புழு உரம் தயாரித்தல் முறைகளை தெரிந்துகொண்டேன்.

இரண்டாம் நாள் : (25.10.2016)

        இயற்கை உரம் தயாரிப்பதற்கு தேவையான சாணம், புள், சாம்பல் & கரி போன்றவைகளை கொண்டு அடுக்குகளை உருவாக்கினோம்.

புள்களை அறுத்து கொண்டு வந்து, மாடு பராமரிப்பு பணியில் ஈடுபட்டோம்.

மேலும் மஞ்சம் புள் நிறைத்த பகுதிகளில் வேலி அமைத்தோம்.

இன்று அடுக்குகள் நிறைத்த உரம் தயாரிப்பு முறைகளையும், மாடு பராமரிப்பு முறைகளையும் அறிந்து கொண்டோம்.   

   













பின்பு மழை காலம் தொடங்க இருப்பதால்,  பண்ணையில் இருந்த மரத்தூண்களை வைத்து பப்பாளி மரங்களுக்கு முட்டு கொடுக்கும் வேலையை செய்து முடித்தோம்.

இதன் மூலம் எப்படி மண்புழு உரத்தை பிரித்து எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்  என்பதையும், மழை காலத்தில் மரங்களை கீழே விழாமல் எப்படி பாதுகாப்பது என்பதையும் கற்றுகொண்டேன்.







" மூங்கிலும் நானும் "

நான்காவது நாள் : (27.10.2016)



      
 காலையில் திரு . ஜனாவாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு,  காலை முதலே மூங்கில் வெட்டும் பணியில் ஈடுபட்டோம், என்னோடு ஜெர்மனியில் இருந்து வந்துள்ள தன்னார்வல மாணவர்கள் ஜனாவாஸ் மட்டும் அனாஸ் என்னோடு இணைந்தார்கள்.. கூடவே                 திரு. முருகன் மற்றும் திரு. சத்தியராஜ் அவர்களும் என்னோடு மூங்கில் வெறும் பணியில் தீவிரமாக இறங்கினார், பின்பு தேநீர் இடைவேலைக்கு சென்றேன் அப்போது திரு.  ஜனாவாஸ் அனைவருக்கும் இனிப்பு வழங்கி அவரது பிறந்தநாளை கொண்டாடினார்,  பின்பு ஜெர்மன் நண்பர்களின் துடிப்பு, வேகம் அதிலும் குறிப்பாக அனாஸ் செய்யும் வேலை நேர்த்தியாக இருந்தது, பின்பு அந்த மூங்கில் மரத்தில் இருந்த கனுக்களை தனித்தனியாக வெட்டி எடுத்தேன்.

பின்பு இன்றைய நாள் முழுக்க மூங்கிலை வெட்டி கொண்டுபோய், பப்பாளி மரங்களுக்கு தூண் முட்டு அமைக்க மூங்கிலை சேகரித்தோம்.
இதன் மூலம் மூங்கில் புதாரில் இருந்து எப்படி மூங்கில்களை தனித்தனியாக வெட்டி எடுப்பது என்பதை கற்றுக்கொண்டேன்.

"  மூங்கிலை புதரில் இருந்து சுலபமாக  வெட்டி எடுக்க அதன் கனுக்களை ஒன்று பின் ஒன்றாக  வெட்டி எடுக்க வேண்டும்,  அதேபோல்   வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சரிசெய்வது சுலபமானது "




" மூங்கில் பாதுகாப்பிலuot;

ஐந்தாவது நாள்: 31/10/ 2016

               Discipline பண்ணைக்கு அதிகாலையில் சென்றேன், பின்பு  திரு.முருகன் அவர்களை சந்தித்து என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை கேட்டறிந்து, பின்னர் நானும் என்னுடன் பணி புரியும்   தன்னார்வலர்கள் ஆன நண்பர்கள் ஜானாவாஸ், அனாஸ் மற்றும் சத்தியராஜ்  ஆகியோரை அழைத்து சென்று ஏற்கனவே வெட்டி சேகரித்து வைத்த மூங்கில்களை பப்பாளி மரங்கள் இருக்கும் இடத்தில் சேர்த்தோம்,  பின்பு  கொண்டு வந்த மூங்கில்களை வைத்து பப்பாளி மரங்களுக்கு முட்டு அமைக்கும்  முறையை திரு. முருகன் விளக்கமாக சொல்லியும் செய்தும் காட்டினார்.

     அதன் பிறகு தற்போது வடக்கிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால்  பப்பாளி  மரங்களி்ன் உயரத்திற்கு ஏற்றவாறு மூங்கில்களை  வெட்டி பப்பாளிக்கு முட்டு கொடுக்கும் பணியை தொடங்கினோம்.

மேலும் வடக்கிழக்கு பருவ மழை காலங்களில் காற்று வடக்கிழக்கில்  இருந்து விசுவதால் அதற்கு எதிர் திசையில் பப்பாளி மரங்களுக்கு முட்டு    கொடுக்கும் பணியை செய்தோம்.

இதன் மூலம் மழை காலங்களில் பப்பாளி போன்ற மென்னையான மரங்களை எப்படி பாதுகாப்பது என்பதை கற்று கொண்டேன்......


                                                                                 




" களையும் உரமாகும் "

ஆறாவது நாள் : 01/11/2016


    வழக்கம் போல் காலையில் பண்ணைக்கு சென்றேன் பின்பு திரு. முருகன் அவர்களிடம் வேலையை கேட்டறிந்தேம்,  பின்பு பண்ணையின் பிண்புரம் பழமரங்கள்  மற்றும் மூலிகை மரங்கள் நடப்பட்டு உள்ளன அந்த பகுதியில் அதிகமான அளவில் களைச்செடி வளர்ந்துள்ளன அந்த களையை எடுப்பதற்காக  திரு. ராஜீவ் மற்றும் என்னுடன் பணிப்புரியும்            தன்னார்வர்களும்  என்னோடு இணைந்தார். அந்த பகுதி முழுக்க மரக்கன்றுகளை சூழ்துள்ள களைகளை எடுக்கதொடங்கினோம், களைகளோடு நிறைந்த தொட்டா சிணுங்கி செடிகளின் முற்கள் பெரும் சவாலாக இருந்தது.  அந்த களைகளை அங்குள்ள மரக்கன்றுகளுக்கு அடியுரமாக இட்டதோடு மீதம் இருந்த புற்களை பசுக்களுக்கு தீவனமாக கொண்டுசொன்றோம்.

இதன்மூலம் களைகளை எப்படி எடுப்பது என்பதையும், அதை எப்படி மரங்களுக்கு உரமாக பயன்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுகொண்டேன்.






"மழை துளிகளுடன் பண்ணை வேலை"

ஏழாவது & கடைசி நாள் : 02/11/2016


                               இன்று கடைசி நாள் காலை மழை துளிகளுடன் வேலையை தொடங்கினேம், பண்ணையின் பின்புரம்  தரிசு நிலமாக கிடந்த பகுதிகளை கேழ்வரகு பயிரிட  மண்வெட்டியால் கிளறினோம். பின்பு  பசுந்தால் உரம் (அ) எருவினை அந்த பகுதிக்கு கொண்டுவந்து சேர்த்தோம். அந்த  எருக்களை அந்த கிளறிய பகுதிகளில்  தூவ ஆரம்பித்தோம், சிறிது நேரத்திலேயே மழை துளிகள்  விழத்தொடங்கியது.. மகிழ்ச்சியும்,  ஆனந்தமாய் இருந்தாலும் பின்பு மழை அதிகமாக வரத்தொடங்கின , ஓடிச்சென்று   கூரையின் கீழ் ஓரமாய் ஒதிங்கினோம் . மீண்டும் மழை குறைய பணி நீண்ட நேரம் தொடர்ந்தது...இன்றைய நாள் மிகவும் களைப்பாக இருந்தது அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இதன் மூலம் தரிசு நிலத்தை எப்படி விலைநிலமாக மாற்றுவது என்பதையும் எருக்களை எவ்வாறு பயன்படுத்து என்பாதையும் கற்றுகொண்டோன்.

கடைசி நாளான இன்று பண்ணை வேலையை முடித்து விட்டு அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் நன்பர்கள்  அனைவரிடமிருந்து மகிழ்ச்சியான முறையில் பிரிவுறா அன்போடு பிரிந்து  விடைபெற்றோம்......

                                     " என்றும் மறையாத விவசாயம் "






By
மதன். பு

No comments:

Post a Comment